ஊரடங்கு உத்தரவால் பலபேர் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன
" alt="" aria-hidden="true" />
ஊரடங்கு உத்தரவால் பலபேர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளனர். இதனால் பல பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்களும் காய்கறிகளும் நிவாரண உதவியாக கொடுக்கப்படுகிறது. இதேபோல் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அம்மன் நகர் மற்றும் பச்சை காடு பகுதியில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு அரிசி சர்க்கரை போன்ற ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் 40 ஆயிரம் செலவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன் மற்றும் வசந்தமாள் முன்னிலையில் கொடுக்கப்பட்டது.